நவம்பர் மாதம் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதில் சேதமடைந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தக் கழிவுகளை சாலை ஓரங்களில் கொட்டுவதால், அது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக அமைகிறது. சில நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகவும் செய்கின்றன.