புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ரெத்தினக்கோட்டை ஊராட்சி கூத்தாடிவயல் வல்லம்பர் குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பில்உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை குடிநீர் தொட்டி கடந்த 2 ஆண்டுகள் முன்பு பழுதடைந்தது.
அறந்தாங்கியை அடுத்த ரெத்தினக்கோட்டை ஊராட்சி கூத்தாடிவயல் வல்லம்பர் குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பில்உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை குடிநீர் தொட்டி கடந்த 2 ஆண்டுகள் முன்பு பழுதடைந்தது.
இதனையடுத்து அதனைச் சீரமைத்து தருமாறு பலமுறை அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் நீண்டதூரம் செய்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் பொதுமக்களுக்கு அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் இன்று காலை கூத்தாடிவயல்வல்லம்பர் குடியிருப்பு சாலையில் காலிக்குடங்களுடனும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.