புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பட்டிகுளம் காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் நேற்று (மே.20) அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பூமிக்கடியில் மறைத்து வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலைக் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து, சட்டவிரோதமாகச் சாராய ஊறலை புதைத்து வைத்திருந்த சாமிநாதன் என்பவரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஊரடங்கைப் பயன்படுத்தி, பல்வேறு மாவட்டங்களில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சும் நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றனர். இருப்பினும் காவல்துறையினர் தொடர் சோதனை நடத்தி, அவற்றை தடுத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டியின் உயிர் காக்கப் போராடிய இளம்பெண்ணை பாராட்டிய ஸ்டாலின்