ETV Bharat / state

’தொற்று பரவாத வகையில் கரோனா சிகிச்சைக் கருவி’ - வடிவமைத்து அசத்திய புதுக்கோட்டை மருத்துவர்!

author img

By

Published : Aug 11, 2020, 9:19 PM IST

25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் இருக்கும் மருத்துவர் பெரியசாமிக்கு வடிவமைப்புகளின் மீது அதீத ஆர்வம். இந்த ஆர்வத்தில் கரோனா சிகிச்சைக்காக பிரத்யேகமாக ஒரு கருவியை வடிவமைத்துள்ளார். இதில், சிகிச்சை அளித்தால் கரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியேறும் மூச்சுக் காற்று, எச்சில், சளி ஆகியவற்றை தொற்று பரவாத வகையில் வெளியேற்ற முடியும்.

மருத்துவர் பெரியசாமியின் வடிவமைப்புகள்
மருத்துவர் பெரியசாமியின் வடிவமைப்புகள்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ‘ஐயோ... ஆராய்ச்சியாளர்களே இதுக்கு யாராவது மருந்து கண்டுபிடிங்களேன்’ என உலகம் முழுக்க மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முடிவே கிடையாதா! என்ற எண்ணம் மக்களிடம் நாளுக்கு நாள் மேலோங்கிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், நோயாளியையும் மருத்துவரையும் காக்க மருத்துவரே ஒரு கருவியை உருவாக்கியுள்ளார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் உண்மை.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பெரியசாமிதான் அந்த வடிவமைப்பாளர். இவரை சந்திப்பதற்காக ஆலங்குடி மருத்துவமனைக்கு ஈடிவி பாரத் சார்பில் விரைந்தோம். ஊருக்குள் நுழைந்ததுமே அவரை விசாரிக்கத் தொடங்கியதுதான் தாமதம், ‘ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது அன்பான மருத்துவராக எவ்வித கர்வமும் இல்லாமல் வைத்தியம் பார்க்கிறார்’ என அவருக்கு ஒட்டுமொத்த ஊருமே புகழாரம் சூட்டினர்.

கொஞ்சம் தாமதிக்காமல் அவரை சந்தித்தோம். தான் கடந்து வந்த பாதையை ஒவ்வொன்றாக விளக்கினார் மருத்துவர் பெரியசாமி. கரோனாவுக்காக அவர் வடிவமைத்த இந்த கருவி தனது 6ஆவது வடிவமைப்பு எனவும், இதற்கு தற்போது காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறியதும் சற்றே ஆடித்தான் போனோம்.

”புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் கந்தர்வகோட்டை கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில்தான் பிறந்தேன். எனது திறமையை மட்டும் நம்பிதான் மருத்துவர் ஆனேன். அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில்தான் எனது லட்சத்தை நோக்கி பயணித்தேன். முதலில் நம்மால் மருத்துவராக முடியுமா என்ற பயம் இருந்தது. ஆனால் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவராகிவிட்டேன். அதோடு நான் நின்றுவிடவில்லை” என்றார் மருத்துவர் பெரியசாமி.

மருத்துவரான நீங்கள் புதிய கருவிகளை கவனம் செலுத்துவது எப்படி? வியக்க வைக்கிறதே எனக் கேட்டதும் சற்றும் யோசிக்காமல் பதில் பேசத் தொடங்கினார், மருத்துவர் பெரியசாமி. அவர் கூறுகையில், “நான் 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் இருக்கிறேன். அதில், வடிவமைப்புகளின் மீது எனக்கிருந்த ஆர்வம் குறையவேயில்லை.

மருத்துவர் பெரியசாமியின் வடிவமைப்புகள்
மருத்துவர் பெரியசாமியின் வடிவமைப்புகள்

முதன்முதலில் ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சியின் போது எனது முதல் வடிவமைப்பான பெரிஸ் பிரீதிங் சர்க்யூட்டை( Peri's breathing cercuit) வடிவமைத்து அறிமுகப்படுத்தினேன். அடுத்தடுத்து பெரிஸ் மௌத் கேஃக் ஹொல்டர் (Peri's mouth gag holder), பெரிஸ் லிம்ப் ஹோல்டர் ( Peri's limb holder), பெரிஸ் ஹீமோஸ்டாட்டிக் நேசல் லூப் ( Peri's hemostatic nacal loop), பெரிஸ் லாப்ராஸ்கோப்பி ட்ரோக்கர் கார்னுலா (peri's laparoscope trocar carnla), மற்றும் தற்போது பெரிஸ் லேரிங்கோஸ்கோப் ப்ளேடு ( Peri's laryngoscope blade) ஆகியவற்றை வடிவமைத்துள்ளேன். இதில் மூன்று கருவிகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன” என்றார்.

பெரிஸ் லேரிங்கோஸ்கோப் ப்ளேடு கருவியைக் குறித்து கேட்கையில், “மருத்துவர்களுக்கு இந்த கருவி மிகுந்த உதவியாக இருக்கும். இந்த கருவியை தேசிய அளவில் சமர்பித்துள்ளேன், குறிப்பாக இதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளேன். நோயாளிகளுக்கு தொண்டை போன்ற இடத்திலோ (அ) உயிருக்கு ஆபத்தான நிலையிலோ சிகிச்சையளிக்கும் போது இக்கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாக இது போன்று ஆய்வு செய்யும் போது லேசான வளைவான விளக்கு மட்டும் உள்ள ஒரு கருவியை பயன்படுத்துவோம்.

மருத்துவர் பெரியசாமியின் வடிவமைப்புகள்
மருத்துவர் பெரியசாமியின் வடிவமைப்புகள்

அதில் மாற்றம் செய்து புதிதாக சில பாகங்களை இணைத்து நுரையீரலுக்கும் ஆக்சிஜன் செலுத்து வகையில் வடிவமைத்துள்ளேன். அதனால் உள்ளுக்குள் வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டதோடு, நோயாளிக்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கும் நேரத்தில் வேறொரு டியூப்பின் உதவியில்லாமல் இதே கருவி மூலம் ஆக்சிஜன் செலுத்தமுடியும். ஆக்சிஜன் செலுத்தும் அதே நேரத்தில் நோயாளியின் தொண்டை, அதன் உள்பகுதியில் வேறு கழிவுகள் இருந்தாலும் அவற்றையும் வெளிக்கொண்டு வர இயலும். இந்த மூன்று வேலைகளையும் ஒருசேர செய்யும் வகையில் இந்த கையடக்க கருவியை வடிவமைத்துள்ளேன்” என்றார்.

கரோனா பரவுவதிலிருந்து எவ்வாறு காக்கிறது?

இந்தக் கருவியைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை முதல் சாதாரண மருத்துவம் வரை செய்ய முடியும் என மருத்துவர் பெரியசாமி உறுதியளிக்கிறார். இந்த கருவியில் சிகிச்சை அளிக்கும் போது கரோனா நோய்த் தொற்றாளர்களிடமிருந்து மூச்சுக் காற்று, எச்சில், சளி மட்டுமல்லாது வேறு மெட்டீரியல் இருந்தாலும் அதுவும் பாதுகாப்பான முறையில் வெளியேறும். ஆகவே மருத்துவர்கள் பயப்படத் தேவையில்லை.

தொற்று பரவாத வகையில் கரோனா சிகிச்சைக் கருவி : சாத்தியமானது எப்படி? மருத்துவரின் பிரத்யேக நேர்க்காணல்

சிறு குழந்தைகள் நாணயத்தை விழுங்கி விட்டாலோ, பற்கள் போன்றவை வயிற்றுக்குள் போய் விட்டாலோ இந்தக் கருவியைப் பயன்படுத்தி வெளியேற்ற முடியும். இந்த கருவி தனது ஆறாவது வடிவமைப்பு என்பதைக் கூட மருத்துவர் பெரியசாமி தன்னடக்கத்துடனே சொல்கிறார்.

மிகவும் உதவிகரமான இக்கருவியை உருவாக்கியுள்ள மருத்துவர் பெரியசாமி, இதனை பிற மருத்துவர்கள் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறார். அவரது வடிவமைப்புகள் மேன்மேலும் மருத்துவத்துறைக்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க:கரோனா வைரஸை அழிக்க கருவி கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.