ETV Bharat / state

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்!

புதுக்கோட்டை : அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் கூலி தொழிலாளி மகள் தேசிய அளவிலான  பளு தூக்கும்  போட்டியில்  பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி சினேகா
author img

By

Published : Mar 20, 2019, 10:59 PM IST

வேலூரில் பிப்ரவரி 17 முதல் 19 வரை மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சினேகா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி பாராட்டியது.

மேலும் இவர் நாக்பூர், புனே உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டிகளிலும் வென்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து 8 முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

இதுகுறித்து சினேகாவிடம் பேசியபோது, தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறேன். மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசை உள்ளது. பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே லட்சியம் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சினேகாவின் தந்தையிடம் பேசியபோது, நான் வறுமையில் இருந்தாலும் எனது பிள்ளைகள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. என் மகள் நிச்சயம் ஒலிம்பிக்கில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது என தெரிவித்தார்.

சினேகாவின் பயிற்சியாளர் முத்துராமலிங்கம் பேசியபோது, நான் எவ்வித பயிற்சி கட்டணங்களும் மாணவிகளிடம் வாங்குவதில்லை பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள் அதை உணர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். சினேகா ஒலிம்பிக்கில் நிச்சயம் வெற்றி பெறுவாள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை இதற்காக புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சினேகாவின் பெற்றோர்களையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஒலிம்பிக்கில் விளையாடி வென்று எனது நாட்டிற்கு பெருமை சேர்ப்பது எனது லட்சியம்..
  அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் கூலி தொழிலாளி மகள் தேசிய அளவிலான  பளு தூக்கும்  போட்டியில்  பதக்கம் வென்று சாதனை..

வேலூரில் பிப்ரவரி 17 முதல் 19 வரை மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சினேகா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார்.இவருக்கு தமிழக அரசின் சார்பில் தங்கப்பதக்கம் மற்றும் ரூ1 இலட்சத்துக்கான காசோலை வழங்கி பாராட்டியது.

மாணவி சி.சினேகா தொடர்ந்து மூன்று முறை அசாமில் நடைபெற்ற தேசிய பள்ளிக் குழும போட்டியிலும்,நாக்பூரில் நடைபெற்ற சப் ஜீனியர் தேசிய போட்டியிலும்,புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.இவர் மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து 8 முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற 2018- 2019 ஆம் ஆண்டிற்கான  தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில்  81 கிலோ எடைப்பிரிவில் புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஒரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி ஆர்.பிரியா பங்கு கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.இவருக்கு அரசு ரூபாய்1.50 இலட்சம் வழங்க இருக்கிறது.

 இதுகுறித்து சினேகாவிடம் கேட்டபோது சாதனைக்கும் திறமைக்கு ஒரு தடையில்லை நான் மிகவும் வறுமை இருக்கக்கூடிய மாணவி என்றாலும் எனது வீட்டில் எனது திறமைக்கு ஆதரவு கொடுத்தார்கள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறேன் மேலும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அத்துடன் விளையாட்டிலும் கவனம் செலுத்தி பளு தூக்கும் போட்டியில் தேசிய அளவில் மாவட்ட அளவில் மாநில அளவில் விளையாடியிருக்கிறேன் தொடர்ந்து ஒலிம்பிக்கில் காமன்வெல்த்தில் போட்டியிட வேண்டும் அதில் போட்டியிட்டு தனது நாட்டிற்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றும் புன்னகையுடன் தெரிவித்தார்.
என்னால் முடிந்த வரை என் பிள்ளைகளை திறமையான ஆளாக உருவாக்க வேண்டும் நான் வறுமையில் இருந்தாலும் எனது பிள்ளைகள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக திகழ வேண்டும் அதுதான் எனது ஆசை என் மகளுக்கு இருக்கும் திறமைக்கு நிச்சயம் ஒலிம்பிக்கில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சினேகாவின் தந்தை.
சினேகாவை போல் எத்தனையோ திறமையான குழந்தைகள் நம் நாட்டில் இருக்கின்றன அவர்கள் முன்வருவது உடைய பெற்றோர்களும் அவர்களை ஆதரிக்க வேண்டும் நான் எவ்வித பயிற்சி கட்டணங்களும் மாணவிகளிடம் வாங்குவதில்லை பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள் அதை உணர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட வீராங்கனைகள் அதிகம் விளையாட்டில் சாதனையாளர்கள் அதிகம் அதேபோன்று சினேகாவும் ஒலிம்பிக்கில் நிச்சயம் வெற்றி பெறுவாள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை இதற்காக புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சினேகாவின் பெற்றோர்களையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சினேகாவின் பயிற்சியாளர் திரு. முத்துராமலிங்கம். 

சினேகாவின் லட்சியம் வெற்றி பெற ETv பாரத் ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.