ETV Bharat / state

தங்கச்சியை கேலி செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் கொலை : 28 ஆண்டுகளுக்கு பின் தண்டனை!

author img

By

Published : Jan 27, 2021, 6:04 PM IST

புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினத்தில் சகோதரியைக் கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணனை கொலை செய்துவிட்டு 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேலாயுதம் பெருமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் தங்கச்சியை கேலி செய்ததை தட்டி கேட்ட அண்ணன் கொலை : 28 ஆண்டுகளுக்கு பின் தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரி ரபேக்கால். இவரை அதே பகுதியை சேர்ந்த இரும்புக் கடை நடத்தி வந்த வேலாயுதம் பெருமாள் என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரபேக்கால் தனது அண்ணனிடம் புகார் தெரிவித்தார்.

சாமுவேல் கடந்த 31.5.90 அன்று வேலாயுதம் பெருமாளை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வேலாயுதம் பெருமாள் சாமுவேலை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இதுதொடர்பாக கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலாயுதம் பெருமாளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வேலாயுதம் பெருமாள் ஜாமீனில் 91ஆம் ஆண்டு வெளியே வந்தபிறகு தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேலாயுதம் பெருமாள் எந்த வழக்கிற்கும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு வேலாயுதம் பெருமாள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தததை தொடர்ந்து மீண்டும் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

மாவட்ட கூடுதல் நீதிபதி மற்றும் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிக் சாமுவேலை கொலை செய்த வேலாயுதம் பெருமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் மூவாயிரம் ரூபாய் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:கேலி செய்தவரை கொலைசெய்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.