புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த விக்னேஸ்வரபுரம் பகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் கரோனா தொற்று சிகிச்சை மையம் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்தத் தகவலை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன், ஆவுடையார் கோவில் காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஊரடங்கு உத்தரவின்போது அதிகம் பேர் கூட்டம் கூடுவது தவறு என பொதுமக்களிடம் எச்சரித்தனர்.
மேலும் இங்கு சிகிச்சையளிக்க மையம் ஆரம்பிக்கப்படும்போது உங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்றும், தற்போது நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்றும் பொதுமக்களிடம் அறிவுறுத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.
இதையும் படிங்க;மழைக்கு ஒதுங்கியது குத்தமா? கத்திகுத்து வாங்கிய ஸ்விகி ஊழியர்