புதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான்பட்டியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.
இங்கு இன்று வழக்கம் போல் வேலையாட்கள் பணியில் ஈடுபட்டுவந்தனர். அந்த இடத்தில் பழனிவேல் வேலை பணிகளை கவனித்து வந்துள்ளார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து மண் சரிந்து விழுந்துள்ளது. இதில் அந்த இடத்தில் பணியில் இருந்த பழனிவேலு (60), காவேரி நகரைச் சேர்ந்த செல்வி (50), மேலமுத்துக்காடு மாரிக்கண்ணு (37) புதுக்கோட்டை அடப்பன்வயலைச் சேர்ந்த மணிகன்டன் (32) ஆகிய நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் கிரசர் உரிமையாளர் பழனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாரிக்கண்ணு, மணிகண்டன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் காவல் துறையினர், பழனிவேல் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் படிக்க: கீழடி தமிழர் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு