ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது!

author img

By

Published : May 9, 2020, 10:03 PM IST

புதுக்கோட்டை: கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

child-welfare-commission-member-r-g-anand

புதுக்கோட்டையில், பாஜக சார்பில் மோடி கிட் என்று சொல்லக்கூடிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், "குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என்பதால் தான் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம் என, அனைத்து மாநிலத்திற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், குழந்தைகள் மீதான வன்முறை குறைந்துள்ளது. கரோனா நம்மை விட்டு எப்போது போகும் என்று தெரியாது.

தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர் ஜி.ஆனந்த்

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது. பிரதமர் மோடியின் அறிவிப்புகளை சிறப்பான முறையில் கடைப்பிடித்ததால் தான், தமிழ்நாட்டிற்கு அதிகளவில் பாதிப்பில்லாமல் ஏற்படாமல் இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: கோவிட்-19: விடை கிடைக்காத ஏராளமான வினாக்கள்! பதில் தேடும் சிறப்புத் தொகுப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.