புதுக்கோட்டை மாவட்டம் நமன சமுத்திரத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அம்மா மினி கிளினிக் பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் முதலமைச்சருக்கு தங்களது நன்றியை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு குக்கிராமங்கள் மற்றும் அதிக மக்கள் வாழும் பகுதியை தேர்ந்தெடுத்து அம்மா மினி கிளினிக் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக புதியதாக 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த வாரம் 856 புதிய மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பெயரளவில்தான் மினி கிளினிக், ஆனால் அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இருக்கிறது.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்ட வேண்டாம், விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்மா மினி கிளினிக் திட்டத்தால் சென்னையில் 5,864 பேர் பயன்’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி