புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வடக்கு அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மணமேல்குடி மருக்கோவில் அருகே உள்ள தோப்பில், முகம் சிதைந்த நிலையில் கிடைப்பதைக் கண்ட பொதுமக்கள் மணமேல்குடி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு மணமேல்குடி காவல் ஆய்வாளர் சாமுவேல் ஞானம் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தார். அப்போது, கண்ணன் கடந்த இரண்டு நாட்களாக இந்த பகுதியில் இருந்து மது அருந்தியுள்ளார். நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து இருக்கலாம் ஆதலால் அவர் இறந்து போயிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
காவலர்களும் சம்பவ இடத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவர் அருகில் மதுபாட்டில்கள், கப்புகள் இருப்பதால் மது அருந்தி தான் இறந்திருக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடல் கருத்து இருக்கலாம். அந்த பகுதியில் நாய்கள், பன்றிகளும் அதிகமாக இருப்பதால் இறந்தவரின் முகத்தை சிதைத்து இருக்கலாம். அல்லது வேறு யாரவாது எரித்தனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் தொடர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.