புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல் மேற்கு ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, மோகன் என்பவரின் மனைவி மல்லிகா(42) போட்டியிட்டார். அவர் போட்டியிட்ட நெடுவாசல் மேற்கு ஊராட்சியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று (டிச.30) படுக்கையில் இருந்து நீண்ட நேரமாகியும் மல்லிகா எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர், உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மஸ்கட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழ்நாட்டுப் பெண் மீட்பு!