ETV Bharat / state

அடிப்படை வசதி வேண்டி அலுவலர்களிடம் பெண் வாக்குவாதம்!

புதுக்கோட்டை: தங்கள் பகுதிகளுக்கு முறையான சாலைவசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரக்கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  மக்கள் குறைதீர்ப்பு முகாம்  அதிகாரிகளுடன் பெண் வாக்குவாதம்  collector grievance meeting  புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்  lady argue with officers in pudukkottai grievance meeting
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்
author img

By

Published : Jan 21, 2020, 2:54 PM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புதுக்கோட்டை அருகேயுள்ள தைலாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது பகுதியில் முறையான சாலை வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று கூறி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, 'எத்தனை முறை மனு அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது சுதந்திர நாடா? உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்கள் பகுதி மக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபடுவோம்' என்றார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை அழைத்து பிரச்னையைக் கேட்டறிந்தார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்.

அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்

இதன்பின்பு மனுவைக் கொடுத்துவிட்டு ஜெயலட்சுமி அமைதியாகச் சென்றார். இது குறித்து பேசிய அப்பெண், "ஏற்கனவே இந்தப் பிரச்னையை தீர்க்கக்கோரி இரண்டு முறை மனு அளித்திருக்கிறேம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முறையான கால்வாய் வசதியில்லாமல், சாக்கடை நீர் சாலைகளில் ஓடுகிறது. 15 ஆண்டுகளாக இப்பிரச்னைகள் உள்ளன. அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்துகொடுக்கத்தானே அரசு இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்கள் பகுதி மக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபடுவோம்" என்றார்.

இதையும் படிங்க: 'றெக்கை கட்டி பறக்கும் தமிழ்' - இனி தமிழ் மொழியிலும் விமான அறிவிப்புகள்

Intro:Body:அடிப்படை வசதி வேண்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள தைலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி தனது ஏரியாவில் சாலை வசதி மின் விளக்கு வசதி கால்வாய் வசதி என எதுவுமே கிடையாது என இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுக்க வந்த பொழுது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எந்த அடிப்படை வசதியும் கிடையாது எத்தனை முறை மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை இது சுதந்திர நாடா என்ன? உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை அழைத்து அவர்களது பிரச்சனையை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து தருகிறேன் என்று உறுதி கூறிய பிறகு மனுவை கொடுத்துவிட்டு அமைதியாக சென்றார்.

இதுகுறித்து அப்பெண்மணி தெரிவித்ததாவது,

ஏற்கனவே இரண்டு தடவை மனு கொடுத்திருக்கிறோம் முதலமைச்சர் அமைச்சர் நகராட்சி அலுவலகம் என அனைத்திற்கும் வாட்ஸ்அப் மற்றும் தபால் மூலம் மனுவை கொடுத்து இருக்கிறோம் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் ஏ எடுக்கவில்லை கால்வாய் இல்லாமல் ரோட்டில் ஓடும் சாக்கடை தண்ணீருக்காக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுக் கொள்கிறோம். 15 வருடங்களாக இந்த பிரச்சனை இருக்கிறது அடிப்படை வசதிகளை செய்யத்தானே அரசாங்கம் இருக்கிறது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.