ETV Bharat / state

புதுக்கோட்டை விவகாரம்; வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு - transferred to CB CID by DGP Sylendrababu

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை (Issue of faeces in drinking water tank) சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 14, 2023, 5:34 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் (Eraiyur Vengai vayal village) கிராமத்தில் குடிநீர் தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஜன.14) உத்தரவிட்டுள்ளார்.

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் குடியிருப்பில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த (Issue of faeces in drinking water tank) அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கான வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த வெள்ளலூர் காவல் நிலைய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளை வலைவீசித்தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான, வழக்கில் முன்னதாக போலீசார் 20 நபர்களுக்கு சம்மன் அனுப்பியதோடு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இன்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்

இதனிடையே, பட்டியல் சமூக மக்கள் அக்கிராமத்திலுள்ள அய்யனார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தபோது, சாமியடிய படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசிய பெண், கிராமத்தில் தேநீர் கடையில் இரட்டைக்குவளை முறையை கடைப்பிடித்த நபர் உள்ளிட்ட இருவர் ஏற்கனவே கைதான நிலையில், அவ்விருவரும் ஜாமீனுக்கு கோரிக்கை விடுத்திருந்ததை அடுத்து, இன்று புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றம் அந்த இருவருக்கும் ஜாமீன் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.