புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள காத்தான்விடுதியைச் சேர்ந்த பிச்சையம்பதீஸ்வரர் என்ற முதியவர், கடந்த 8ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் நம்பன்பட்டி ரெங்கசாமி என்பவரின் மனைவி சுந்தரம்பாளுக்கு சொந்தமான பட்டா இடத்தில், அடக்கம் செய்யப்பட்டது. இதனால், சுந்தரம்பாள் ஆதரவாளர்கள் கடந்த 19ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கரம்பக்குடி தாசில்தாரிடம் புகாரும் அளித்தனர்.
இதையடுத்து, தனியாருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யுமாறு பிச்சையம்பதீஸ்வரரின் உறவினர்களுக்கு தாசில்தார் சுற்றறிக்கை அனுப்பினார்.
ஆனால், அவ்விடத்தில் இருந்து சடலம் அகற்றப்படாததால் அப்பகுதிக்கு சென்ற தாசில்தார், காவல்துறையினரின் உதவியோடு பிச்சையின் உடலை எடுக்க முயன்றனர். அப்போது, பிச்சை உறவினர்களில் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். பின்னர், காவல்துறைியனர் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, உடலை தோண்டி எடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.