ETV Bharat / state

மருத்துவர் கனவில் இருந்த மாணவி நீட் தேர்வால் தற்கொலையா?

author img

By

Published : Sep 2, 2020, 10:54 AM IST

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரது மகள் ஹரிஷ்மா. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், தன்னுடன் படித்த சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது.

தனக்கு மட்டும் ஹால் டிக்கெட் வராததால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று (செப்.1) நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது. மாணவி வயிற்று வலி பிரச்னை காரணமாக தற்கொாலை செய்துக்கொண்டதாக அவரது தந்தை காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சக மாணவிகளிடம் விசாரித்தபோது, ஹால் டிக்கெட் வராததால் ஹரிஷ்மாவை அவரது தந்தை திட்டியதாக் கூறப்படுகிறது.

இதில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக புகார் எழுந்துள்ளது. மாணவி ஹரிஷ்மாவின் ஊர் கிராமம் என்பதால் ஹால்டிக்கெட் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதை மாற்ற கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் -044 -24640050.

இதையும் படிங்க: முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு: அரசு மருத்துவர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.