ETV Bharat / state

சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து இலவச பயிற்சி வகுப்பு: போஸ்டர் ஒட்டி அலுவலர்களுக்கு அழைப்பு! - தேசிய நெடுஞ்சாலை துறையினர்

புதுக்கோட்டை: சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து அலுவலர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு அளிக்க இருப்பதாக தனிநபர் ஒருவர் போஸ்டர் ஒட்டி உள்ளார்.

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
author img

By

Published : Sep 10, 2020, 11:01 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் துரை குணா (41). இவர் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை அவ்வப்போது எடுத்துக்கூறி தீர்வு காண்பதில் ஆர்வம் மிகுந்தவர்.

கடந்த ஆண்டு குளத்தை காணவில்லை என கண்டுபிடித்து தருமாறு மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது புதுக்கோட்டையில் இருந்து கரம்பக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து தனிநபர்களால் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றக்கோரி கடந்த பிப்ரவரி மாதம் வருவாய் துறையினரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

கோரிக்கை விடுத்தும் எந்த வித பயனும் இல்லை என்பதால் நேற்று முன்தினம் (செப்டம்பர் 8) ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செப்டம்பர் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆகியோர் என்னிடம் ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பிற்கு வர வேண்டும்.

அதில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றுவது எப்படி என வகுப்பு எடுக்கப்படும். பயிற்சிக்கு வரும் அலுவலர்களுக்கு சாப்பாடு, டீ, வடை, பேனா, பயணப்படி ஆகியவை வழங்கப்படும் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தார். இப்போஸ்டர் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து துரைகுணாவிடம் கேட்டபோது, ஒவ்வொரு பிரச்சனைகளையும் கையில் எடுக்கும் பொழுது அதற்கான தீர்வு காண வேண்டும் என்றுதான் பல்வேறு போராட்டங்களில் செய்ய வேண்டியுள்ளது.

அதேபோல இந்த கரம்பகுடி நெடுஞ்சாலையில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தனிநபர்களால் வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் நிறைய விபத்துக்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்க வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த பிப்ரவரி மாதம் மனு கொடுத்திருந்தேன். அதன் பின்னும் தொடர்ந்து கோரிக்கை வைத்து கொண்டே இருந்தேன்.

இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் இப்படி ஒரு போஸ்டர் ஒன்றை தயார் செய்து வெளியிட்டேன். போஸ்டர் மட்டுமல்ல உண்மையிலேயே நான் வகுப்பு எடுக்க தயாராக இருக்கிறேன். ஏனென்றால் அத்தனை அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க தயங்கும் அலுவலர்களால் தான் இந்த சமூகத்தில் நிறைய பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் அப்படியே இருக்கிறது.

நெடுஞ்சாலை துறையினர் இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும், மக்களும் அதற்கு ஆதரவு தரவேண்டும் என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.