புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த மணலூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார் சத்யஸ்ரீ என்ற 11 வயது சிறுமி. தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சிறுமியின் வீட்டு சுவர் திடீரென இன்று (ஜன.15) இடிந்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி சத்யஸ்ரீயை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.