புதுக்கோட்டை மாவட்டத்தின் நகர மையப்பகுதியில் சாந்தநாத சுவாமி வேதநாயகி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தப்பட்டுவந்தது.
இதனால் கோயில் முழுவதும், சூரிய மின்தகடு மூலமாக விளக்குகள் எரிவதற்கு இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் முடிவுசெய்தனர். இந்த முடிவை ஏற்று, உபயதாரர்கள் மூலமாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு கிலோ வாட் உள்ள இரண்டு சோலார் பிளான்ட்கள் கோயிலின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைச் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேற்று (செப். 26) நேரில் சென்று தொடங்கிவைத்தார். இதன்மூலம் கோயிலுக்குள் சுமார் 60 விளக்குகள் எரியும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கிராம பஞ்சாயத்தைப் பொதுப்பிரிவினருக்கு அறிவிக்கக் கோரி வழக்கு