ETV Bharat / state

புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை - புதுக்கோட்டை ஆட்சியர்! - உள்ளாட்சி தேர்தல் செய்திகள்

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

pudukkottai
pudukkottai
author img

By

Published : Dec 11, 2019, 9:40 AM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, "புதுக்கோட்டை மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முதற்கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்றாணடார்கோவில், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல்கள் நடைபெறும்.

அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான எந்தவொரு அலுவலகங்களிலும், கட்டடங்களிலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்துதல், இதர தேர்தல் பணிகள் மேற்கொள்ளுதல் கூடாது. தேர்தல் வேட்பாளரின் பெயர், கட்சியின் பெயர் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பரத் தட்டிகளோ, சுவரொட்டிகளோ பொது இடங்களில் வைக்க அனுமதி கிடையாது.

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை தேர்தல் செலவினக் கணக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள படிவத்தில் பதிவிட்டு அதன் நகலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்கு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனுக்கள் 09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்படும். இதில் 14.12.2019, 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

தேர்தலுக்காக ஏழு பறக்கும்படை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 440 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்ணில் 04322-221691 தெரிவிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்!

Intro:Body:

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுபாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரிதகவல்.

       புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் 2019 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி  தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார்  முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

     புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்வரும் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக அன்னவாசல்  விராலிமலை  குன்றாணடார்கோவில்  கந்தர்வக்கோட்டை  கறம்பக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும்  இரண்டாம் கட்டமாக  அறந்தாங்கி  அரிமளம்  ஆவுடையார்கோவில்  பொன்னமராவதி  மணமேல்குடி  திருமயம் மற்றும் திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
     குறிப்பாக  அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சொந்தமான எந்த ஒரு அலுவலகங்களிலும் அல்லது கட்டடங்களிலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்துவதையோ  இதர தேர்தல் பணிகளை மேற்கொள்வதோ கூடாது. பாராளுமன்ற பொது தேர்தல் 2019இன் போது நடைமுறைபடுத்தப்பட்டது போன்று எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்களிலும்  வேட்பாளரின் பெயரிலோ கட்சிகள் பெயரிலோ எவ்விதமான விளம்பரத் தட்டிகளோ  விளம்பர பட்டிகைகளோ  சுவரொட்டிகளோ  விளம்பரப்படங்களோ பொது இடங்களில் வைக்க அனுமதி கிடையாது.
     வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை செலவினக் கணக்கினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள படிவத்தில் பராமரித்திட வேண்டும். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் அதன் நகலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பு மனுக்கள் 09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்படும். இவற்றில் 14.12.2019 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது.
மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 7 பறக்கும்படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது நிலவரப்படி மாவட்டத்தில் 440 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க  மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04322-221691ல் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

 Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.