ETV Bharat / state

சிறுமி வன்புணர்வு- இளைஞருக்கு இரட்டை ஆயுள்! - etvbharat

ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

author img

By

Published : Jul 16, 2021, 12:55 PM IST

புதுக்கோட்டை: பென்னமராவதி தாலுகா, கொப்பனாப்பட்டியில் வசித்த 7 வயது பள்ளி சிறுமியை அவரது உறவினரான கார்த்திக் (24) என்பவர் 2018ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதியன்று தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை

இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி சு. சத்யா, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த அபராதத் தொகையை கட்ட தவறினால், ஒரு வருடம் சிறைத் தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

மத்திய சிறையில் அடைப்பு

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தொகையை அரசு சார்பில் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை சிறப்பாக புலன்விசாரணை செய்த காவல் ஆய்வாளர் செந்தமிழ்செல்வி, நீதிமன்ற பணிக்காவலர் முதல் நிலை காவலர் வளர்மதி ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வெகுவாக பாராட்டினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கார்த்திக் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 'பிரியாணி கடையில் செல்போன் திருடிய நபருக்கு வலைவீச்சு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.