ETV Bharat / state

கரோனாவை வைத்து ஊழல் செய்யும் அதிமுக அரசு - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் - dmk chief mk stalin speech in pudukottai marriage function

சென்னை: உலகமே கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிமுக அரசு மட்டும் கரோனாவை வைத்து புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Oct 18, 2020, 10:01 PM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரன் இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், "இது சுயமரியாதைத் திருமணம். தமிழ் முறையிலான திருமணம். சீர்திருத்தத் திருமணம். அதையும் தாண்டி, புதுமையான முறையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றிருக்கும் திருமணம்.

கரோனா காலம் நமக்குப் பல இழப்புகளை - நெருக்கடிகளை - சோதனைகளை ஏற்படுத்தினாலும், இப்படிச் சில அரிய புதுமைகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. திருமண விழாவைச் சிறப்பாக நடத்தும் அளவுக்கு இந்தக் காணொலித் தொழில்நுட்ப வசதி நமக்கு வழி செய்திருக்கிறது!

கரோனா காலத்தைப் பயன்படுத்திக் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும் தான் கரோனாவை வைத்து 'புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம்' என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதிலும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறாரே, அவரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பரிசோதனைக் கருவியிலேயே ஊழலை வெற்றிகரமாக செய்து, கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார். ஊழலையே திருமணம் செய்துகொண்டு, ஊழலுடனேயே இல்லறம் நடத்தி, ஊழல் குழந்தைகளைக் கட்டுப்பாடின்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி!

ஸ்டாலின்
ஸ்டாலின்

அவர்களின் இந்த ஊழல் தேனிலவு - ஊழல் குடித்தனம் எல்லாம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அதன்பிறகு, புதுக்கோட்டை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். தமிழ்நாட்டிற்குப் புதிய வெளிச்சம் பிறக்கும்!

இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவோர் இரண்டு தரப்பினர் மட்டும்தான். ஒன்று - பழனிசாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு - எடப்பாடி பழனிசாமியையும் அவருடைய கொள்ளைக் கூட்டத்தையும் இயக்கி வரும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

ஏனென்றால், தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்தால்தானே, நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களுடைய மருத்துவக் கனவைத் தகர்த்து - கோச்சிங் செண்டர் எனும் பெயரில் அவற்றை நடத்தும், தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தைச் சம்பாதிக்க முடியும்!

பல்லாயிரம் பொறியாளர்களை உருவாக்கிய பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்து எனச் சொல்லி, அதனை அபகரிக்க முடியும். வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துத் தங்களுக்கு வேண்டியவர்கள் கைகளில் நிலங்களை ஒப்படைக்க முடியும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொள்ள முடியும். ஊழல் எனும் பெயரில் அதிமுக அமைச்சர்கள் தொடங்கி, தலைமைச் செயலகம் வரை ரெய்டு நடத்தி, அதைக் காட்டி மிரட்டியே, தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்ள முடியும். இதுபோன்ற மோசடி வேலைகள் நடப்பதற்கு இருட்டுதானே வசதி. அதனால்தான், இந்த இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என்று மத்தியில் இருப்பவர்கள் விரும்புகிறார்கள்.

திமுகவை பார்த்து, குடும்பக் கட்சி என்று சொல்பவர்களுக்கு, இந்த கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான் என்று பதில் சொல்கின்ற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் - குவாரி காண்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது" என்றார்.

இதையும் படிங்க: திருவானைக்காவல் பள்ளிவாசல் முன்பகுதி இடிப்பு - சீமான் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.