புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள காடை இடையாத்தூர் கிராமத்தில் இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு சமுதாயத்தினருக்கு 1996ஆம் ஆண்டு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது மற்றொரு சமுகத்தினர் பயண்படுத்தி வந்த பாதையையும் சேர்த்து பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் அது கணக்கில் ஏற்றப்படாமல் இருந்த நிலையில், இரு சமூகத்தினரும் பொதுவாக அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சமீபத்தில் இந்தப் பாதை தொடர்பாக கணக்கில் ஏற்றப்பட்டு பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்தப் பாதையை ஒரு சமூகத்தினர் அடைத்த நிலையில், மற்றொரு தரப்பினர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு அலுவலர்களுக்கு மனு கொடுத்தனர்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக உரிய தகவல் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் அறந்தாங்கி சார் ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வளாகத்தின் உள்ளேயே அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமையல் செய்வதைத் தடுத்தனர்.
இதையும் படிங்க: மாஸ்க் தேடி அலைந்த பயணிகள்...பேருந்துகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு