ETV Bharat / state

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் பீதி - டெங்கு காய்ச்சல்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்
author img

By

Published : Sep 16, 2019, 8:26 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சல் தீவிரமாக பரவிய நிலையில், வெளியாத்தூர் கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதுடன், தொற்றுநோய் பரவாத வகையில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மருந்துகளை தெளித்து வருகின்றனர்.

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் குடியிருப்பில் ஏராளமானோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நோய் பரவுவதற்கு முன் அரசு அலுவலர்கள் யாரும் கிராமத்துக்கு வரவில்லை. தற்போது, காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டவுடன், சுகாதாரம் இல்லை என்றுக்கூறி மருந்துகள் தெளிக்கிறார்கள். காய்ச்சல் யாருக்கும் பரவாமல் தடுக்க வரும்காலங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுபற்றி சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் கூறுகையில், "இங்குள்ளவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் வந்திருக்கிறது. அதுவும் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய காரணம். குறிப்பாக, ஒவ்வொரு வீடுகளிலும் 3 முதல் 4 மூட்டை பிளாஸ்டிக் பொருட்கள், டயர் அட்டை என அனைத்தையும் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளோம். 4 நாட்களாக தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்றனர்.

Intro:Body:அறந்தாங்கி அருகே வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்கள் பீதி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் புது க்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் தீவிரமாக பரவிய நிலையில், 'தற்போது வெளியாத்தூர் கிராமத்தில் சுகாதரத்துறை சார்பில் சுகாதரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதரப்பணியாளர்கள் பொதுமக்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதுடன், தொற்றுநோய் பரவாத வகையில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மருந்துகளை தெளித்து வருகின்றனர். சுகாதரத்துறை அமைச்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது,
எங்க குடியிருப்பில் ஏராளமானோர்க்கு டெங்கு காய்ச்சல்.புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர்றாங்க. என் பொண்ணுக்கும் காயச்சல் இருந்துச்சு. இப்போ சரியாகிருச்சு. தனியார் மருத்துவமனைக்கு கூட்டி போனால், டெங்கு காய்ச்சல் என்று சொல்லி சிகிச்சை அளிக்கிறாங்க.ஆனால், அரசு மருத்துவமனையில் டெஸ்டுக்கு அப்புறமும் எதுவுமே சொல்ல மாட்றாங்க. நோய் தாக்குறதுக்கு முன்னாடி ஒருத்தரும் இங்க வரலை. எல்லாரும் காய்ச்சல் வந்து படுத்ததுக்கு அப்புறம் வந்து இப்போ சுத்தம் இல்லைன்னு சொல்லி கிளீன் பண்றாங்க. இனியாவது காய்ச்சல் யாருக்கும் பரவாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்
இதுபற்றி சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள்
"இங்குள்ளவர்கள் அனைவருக்கும் சாதாரண காய்ச்சல் தான் வந்திருக்கிறது. அதுவும் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய காரணம். குறிப்பாக, ஒவ்வொரு வீடுகளிலும் 3 முதல் 4 மூட்டை பிளாஸ்டிக் பொருட்கள்,டயர் அட்டை என அனைத்தையும் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளோ. 4நாட்களாக தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.