புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டியில் அமைந்துள்ள அருள்பாலித்து வரும் ஸ்ரீ அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தையம் நடத்தப்படுவது வழக்கம்
இந்தாண்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
ஸ்ரீ அரியநாயகி அம்மன் ஆலய வாசலிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரம் பந்தை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் என மூன்று பிரிவுகளாக பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் சீறிப்பாய்ந்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு, கோப்பைகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதில் சுமார் 40க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 'யானைக்கு சப்போர்ட் பண்ணுங்க' - பிஞ்சுக் குரலில் கெஞ்சும் குழந்தை