ETV Bharat / state

கரோனா பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம் - Pudukkottai District News

புதுக்கோட்டை: முறையாக சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் உறவினர்கள்
போராட்டத்தில் உறவினர்கள்
author img

By

Published : May 15, 2021, 1:35 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞான பாண்டியன் (40). . இவர் அதே பகுதியில் ஒரு சிறிய கடை நடத்தி வந்தார். இவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (மே.14) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள், முறையான சிகிச்சை அளிக்காததால் ஞான பாண்டியன் உயிரிழந்ததாக கூறி, பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போஸ் நகர் மின்மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கரோனா தொற்றால் உயிரிழந்த ஞான பாண்டியன் மாவட்ட மக்கள் பாதை அமைப்பின் கொடை திட்ட பொறுப்பாளராக இருந்ததோடு, ரத்ததானமும் செய்து வந்தார்.

இதையும் படிங்க: கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.