ETV Bharat / state

'விவசாயத்துக்கு தண்ணீரில்லை... விளைவித்த பஞ்சுக்கு விலையில்லை' - குமுறும் பருத்தி விவசாயிகள் - cotton plants

ஒரு மூட்டையில் 35 கிலோ பருத்தி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 20 முதல் 25 ரூபாய்தான் விலை வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. கரோனா நெருக்கடியில் பறித்து வைத்த பருத்தியை விற்பனைக்கு அனுப்பிவைக்க முடியாமல் வீட்டிலேயே வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, அரசுதான் பொறுப்பெடுத்து உதவ வேண்டும்...

பருத்தி விவசாயி
பருத்தி விவசாயி
author img

By

Published : Jul 25, 2020, 7:47 PM IST

கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் நெல், தென்னை, வாழை, பலா, மா, காய்கறிகள் போன்ற அனைத்தும் பயிரிடப்படுகின்றன. அதேபோல பருத்தி விவசாயமும் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த மாவட்டத்தில் அண்டக்குளம், சானகி, வாகைவாசல், வயல் புத்தாம்பூர் போன்ற பகுதிகளில் பருத்தி சாகுபடிதான் பிரதானம். கரோனா நெருக்கடி அனைத்து விவசாயிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உண்டாக்கிய நிலையில், சானகி வயல் கிராம விவசாயிகளுக்கு மற்றுமொரு பிரச்னையும் மன உளைச்சலைக் கொடுத்துவருகிறது.

அது என்னவென அறிய புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு வந்தோம். விதைத்த பருத்தியை விற்க வழியில்லை, விற்றாலும் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என புலம்பித் தீர்க்கிறார், விவசாயி சங்கீதா.

மேலும் அவர் கூறுகையில், “பருத்தி அறுவடைக் காலம் வந்ததும் அது எங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று நினைத்தோம். ஆனால் சரியான விலை கிடைக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவுக்கு தண்ணீரும் இல்லை. இந்தக் கிராமத்தை அரசு அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை. சின்ன கேணிகூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுவருகிறோம்” என்றார்.

”கடந்த வருடம் பருத்தி கிலோவுக்கு 60 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வருடம் அதில் பாதிகூட கிடைக்கவில்லை; நிலைமை இப்படி இருந்தால் வயலில் வேலை செய்வோருக்கு எப்படி கூலி கொடுக்க முடியும். களிடம் வாங்கிய கடனை அடைக்கக்கூட பணமில்லை” என வேதனை தெரிவிக்கிறார், விவசாயி அமுதா.

தொடர்ந்து பேசிய அமுதா, “ஒரு மூட்டையில் 35 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு செல்வோம். ஒரு கிலோவிற்கு 20 முதல் 25 ரூபாய்தான் விலை வைத்து கொள்முதல் செய்கின்றனர். பறித்து வைத்த பருத்தியை விற்பனைக்கு அனுப்பிவைக்க முடியாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறோம். அரசுதான் எங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும்” என்றார்.

பருத்தி பயிர் செய்வதற்கு போதிய தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், அறுவடை செய்த பருத்தியையும் விற்க முடியவில்லை. இனி விவசாயமே வேண்டாம் என்றுகூட தோன்றுகிறது. கடன் வாங்கி விவசாயம் செய்து அதை அடைக்க முடியாமல் மீண்டும் கடன் வாங்கும் நிலைமைதான் தங்களுக்கு இருக்கிறது. இந்தப் பிரச்னைகளை அரசு அலுவலர்களிடம் தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதேனும் மானியம் அல்லது இழப்பீடு கொடுத்தால் நன்றாக இருக்கும் என கள எதார்த்தத்தை எடுத்துரைக்கிறார், விவசாயி சிதம்பரம்.

தண்ணீரின்றி அல்லல்படும் பருத்தி விவசாயிகள் குறித்த தொகுப்பு!

விவசாயத்திற்குத் தேவைப்படும் தண்ணீருக்கு என கிணறு, ஆழ்த்துளைக் கிணறு ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல, விசாயிகள் உற்பத்தி செய்யும் பஞ்சை அரசாங்கம் நேரடியாகக் கொள்முதல் செய்தால் தங்களுக்கும் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அவர்களின் குரலுக்கு விரைந்து செவிசாய்த்தால் நலமாக இருக்கும்.

இதையும் படிங்க: உரிய விலை இல்லாததால் செடியிலேயே வெடித்து வீணாகும் பருத்தி - வேதனையில் விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.