புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தின் காடுகளில் புள்ளிமான்கள் உள்ளன. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது வயல்வெளிகளில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. மானை அப்பகுதியில் சுற்றித் திரந்த நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக பலியானது. இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் ராஜசேகரன், கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் இறந்த புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்த பின் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.