புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் தமிழரசன் (23), கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். மகள் பார்கவி (22) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தமிழரசன், பார்கவி இருவரும் நேற்றிரவு (ஜன.17) மாடிக்குச் சென்றனர். அப்போது, மாடியில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவரது அலறல் சத்தம் கேட்ட தாய் கோப்பெருந்தேவி, வேகமாக மாடிக்குச் சென்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசிப்பட்டார். இதில், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகினறனர்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு