புதுக்கோட்டை பொது அலுவலகத்தில் இன்று உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்து மரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது என்றும், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தலைசிறந்த முன்னோடி மாநிலமாக விளங்குகிறது எனவும் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி ஏசியன் ரெக்கார்ட் புக்கில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.