ETV Bharat / state

'ஆளுநரின் ஆளுமையே நமஸ்தே' புதுக்கோட்டையில் பாஜக போஸ்டர் அடித்து ஆதரவு - latest tamil news

தமிழ்நாடு ஆளுநருக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் பாஜக சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் பாஜக போஸ்டர்
புதுக்கோட்டையில் பாஜக போஸ்டர்
author img

By

Published : Jan 10, 2023, 9:56 AM IST

புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று (ஜனவரி 9) தொடங்கியது. அப்போது தமிழில் உரையாற்றினார். திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் உரையை புறக்கணித்தனர். மாநில உரிமைகளை பறிக்காதே, கவர்னரே ஆர்எஸ்எஸ் போல செயல்படாதே, எங்கள் நாடு தமிழ்நாடு, கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் கவர்னரை கண்டிக்கிறோம் என கோஷமிட்டனர்.

இதைக் கண்டு கொள்ளாமல் ஆளுநர் தனது உரையை முடித்தார். அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை மரபுகளை மீறிய ஒன்று என்று தெரிவித்தார். தனது உரைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அறிந்து கொண்டதும், இருக்கையை விட்டு வேகமாக எழுந்து சென்றார் ஆளுநர் ரவி.

புதுக்கோட்டையில் பாஜக போஸ்டர்
புதுக்கோட்டையில் பாஜக போஸ்டர்

இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு, ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஆளுநரின் செயல்பாட்டை ஆதரித்தும், சட்டப்பேரவை மரபுகளை மீறி ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய திமுகவினரை கண்டித்தும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் "ஆளுநரின் ஆளுமையே நமஸ்தே" என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி, பொதுமக்களி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ஆர்.என்.ரவி ஆளுநராக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ்.காரராக உள்ளார்' - கி.வீரமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.