ETV Bharat / state

அறந்தாங்கியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்!

author img

By

Published : May 11, 2020, 10:09 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  புதுக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  ரூ.1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்  Banned Plastics  Banned Plastics Recovered In Pudukottai  One Lakh Ruppees Plastic Recovered
Banned Plastics Recovered In Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் நாள்தோறும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் இயங்கி வந்த கடை ஒன்றில் சோதனை நடத்தினர்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நகாராட்சி அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு அபாராதமும் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகணேஷ் கூறுகையில், "அறந்தாங்கி பகுதியில் தினசரி அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப் படுகிறதா என நகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். அதையும் மீறி இதேபோல் விற்பனை செய்பவர்களிடம் இருந்து பொருள்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  புதுக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  ரூ.1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்  Banned Plastics  Banned Plastics Recovered In Pudukottai  One Lakh Ruppees Plastic Recovered
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள்

இன்றைய ஆய்வின் போது பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அதன்பேரில், ஆய்வு மேற்கொண்ட போது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 450 கிலோ பிளாஸ்டிக் கப்புகள் கொண்ட ஆறு பைகளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஒரு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.