புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள்," புதுக்கோட்டை மாவட்ட காவிரி பாசனப் பகுதிக்கு தேவையான அளவு தண்ணீர்ஐ வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணை கால்வாய் முதல் மும்பாலை வரை கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லணைக் கால்வாயில் பழுதடைந்த கரைகளை செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிடம் மனுக்கொடுக்க உள்ளோம். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.