புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதியைக் கண்டித்து அதிமுக பட்டியலினப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர்கள் தொடர்ந்து பட்டியலின மக்களைத் தொடர்ந்து, அவதூறாகப் பேசி வருவதைக் கண்டித்தும், அவர்களை தட்டிக் கேட்காத திமுக தலைவர் ஸ்டாலினைக் கண்டித்தும் அதிமுக பட்டியலினப் பிரிவினர் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அய்யனார்புரம் பகுதியிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே அமைந்துள்ள அதிமுக அலுவலகங்களின் முன்னிலையிலும் நூற்றுக்கணக்கான பட்டியலின மக்கள் ஒன்றிணைந்து கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து திமுக தலைவர்கள் பட்டியலின மக்களை அவதூறாகப் பேசி வருவது கண்டனத்திற்குரியது என்றும், இதனைத் தட்டிக் கேட்காத தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.