ETV Bharat / state

மாற்றுத்திறனாளி மகளுடன் ஆபத்தான வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற விதவை; வீடு வழங்க கோரிக்கை

author img

By

Published : Nov 3, 2022, 10:11 AM IST

திருமயம் அருகே மாற்றுத்திறனாளி மகளுடன் இடிந்த நிலையில் உள்ள வீட்டில் வாழும் ஆதரவற்ற விதவை, அரசு தனக்கு வீடு வழங்கி உதவ வேண்டும் என் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மகளுடன் ஆபத்தான வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற விதவை

புதுக்கோட்டை: திருமயம் அருகே குழிபிறைபட்டியில் வசித்து வருபவர் சித்ரா. இவரது கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவின் காரணமாக இறந்துவிட்ட நிலையில், தனது மாற்றுத்திறனாளி மகள்‌ மற்றும் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகிறார்.

இவரது பாழடைந்த ஓட்டு வீடானது கரையான்கள் அரித்து உள்ளதோடு, சுவர்களில் ஆங்காங்கே விரிசல் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டு இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரை ஓடுகள் உடைந்து உள்ளதால், மழைக்காலங்களில் வீட்டின் உள்ளே மழைநீர் ஒழுகுவதால், அருகில் உள்ள அங்கன்வாடியில் மழை காலங்களில் சித்ரா வசித்து வருகிறார்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழும், முதலமைச்சர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழும், வீடு கட்ட பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை இவருக்கு வீடு கட்டித் தரப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக வீடுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை: சாலையோர கடைகள் அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.