புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (43). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நல்ல தம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.