புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (60) நேற்று, கண்ணாரத்தெருவைச் சேர்ந்த பள்ளிவாசலின் கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில். தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிருக்குப் போராடிவந்த வள்ளியம்மாளை கயிறுகட்டி மீட்டு கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவந்தனர்.
தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தால் இலுப்பூர் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:
பசுவின் வயிற்றில் 52 கிலோ நெகிழி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!