ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு விரைவில் 20ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வரும்- அமைச்சர் விஜயபாஸ்கர் - தடுப்பூசி போடும் பணி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டிற்கு விரைவில் இருபதாயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்காக வரவுள்ளது என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

20-thousand-covaxin-vaccine-will-come-to-tamil-nadu-soon-minister-vijayabaskar

author img

By

Published : Jan 12, 2021, 10:55 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போது ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 550 கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் விமானம் மூலமாக வரப் பெற்றுள்ளது. இந்த தடுப்பு மருந்து தமிழ்நாட்டில் உள்ள 10 மண்டல பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அதேபோன்று 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. இதுவரை 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மத்திய அரசின் வழிமுறைகளின்படி தடுப்பு மருந்து வழங்கப்படும். அதன் பின்னர், மாநிலத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். தடுப்பு மருந்து வழங்குவதில் எந்த விதமான குழப்பமும் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை.

பல ஆய்வுகளுக்கு பிறகு தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் போது எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை. எனவே தடுப்பு மருந்து பாதுகாப்பானது. பொதுமக்கள் தடுப்பு மருந்துகள் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இந்தத் தடுப்பு மருந்து, புதுவகையான கரோனா வைரஸ் பரவாமல் இருக்க வழிவகை செய்யும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து "உலக நாடுகள் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கரோனா பரவல் அதிகரித்த போது அரசை குறை கூறியவர்கள் தற்போது தடுப்பு பணிகளின் காரணமாக தொற்று குறைந்து வருவதை பாராட்ட மனமில்லாமல் உள்ளனர்" என எதிர்கட்சியினரை விமர்சித்தார்.

இதையும் படிங்க: தமிழகம் வந்த கரோனா தடுப்பூசிகள்! - சுகாதாரத்துறை செயலாளருடன் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.