2004ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, கும்பகோணம் தனியார் பள்ளியில் நடைபெற்ற பயங்கர தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி சாம்பலாகினர். இந்த துயர சம்பவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்க்கப்பட்டது.
இதற்காக, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில், பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பு மற்றும் இளைஞர்கள் இயக்கம் சார்பாக 94 குழந்தைகளின் உருவப் படத்துக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். இதில், இளைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.