பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்வீலிங் சாகசத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அதிக வாகனப் போக்குவரத்து உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் இளைஞர்கள் செய்த பைக்வீலிங் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பொதுமக்கள் அதிகளவில் செல்லும் இந்த சாலையில் பைக்வீலிங் செய்யும் இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உணவு டெலிவரி செய்ய வந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன் பறிப்பு!