பெரம்பலூர் மாவட்டத்தில் 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் நீதிபதி கருணாநிதி தொடங்கிவைத்தார்.
அதன்பின் பேசிய அவர், பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மொபைல் ஆப்கள் தான் முக்கியக் காரணம் என்றார். விவரமறிந்த பெண்களே மொபைல்களால் திசைமாறி செல்லும்போது, குழந்தைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அனைவரின் கடமை எனவும் அவர் கூறினார்.
மேலும், இந்தப் பயிற்சி முகாமில், குழந்தைப் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம், குழந்தைகள் உரிமைகள், தொழிலாளர் கட்டாயக்கல்வி, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன. இந்தப் பயிற்சி முகாமில், மகளிர் சக்தி கேந்திரா திட்ட அலுவலர் ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பெண்ணின் கருகலைப்பு கோரிய வழக்கு: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை சமர்பிக்க சமர்பிக்க உத்தரவு