ETV Bharat / state

கரோனா விதிமுறைகளை மீறி ஒரே நேரத்தில் ஐந்து திருமணம்!

author img

By

Published : May 24, 2021, 2:36 PM IST

பெரம்பலூரில் கரோனோ விதிமுறைகளை மீறி ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைப்பெற்றது.

கரோனா விதிமுறைகளை மீறி ஒரே நேரத்தில் ஐந்து திருமணம்!
கரோனா விதிமுறைகளை மீறி ஒரே நேரத்தில் ஐந்து திருமணம்!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று(மே.24) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு சமயத்தில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு கரோனா வழிகாட்டுநெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு மதனகோபால சுவாமி கோவியில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன.இதில் கலந்து கொண்டவர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

இந்த திருமணங்களில், விதியை மீறி அதிகளவில் கலந்து உறவினர்கள், கலந்து கொண்டனர். மணமக்கள், உறவினர்கள் என அனைவருமே முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தனர்.

இதுபோன்று, விதி முறைகளை மீறி கடந்த வாரமும் தொடர் திருமணங்கள் இந்த ஆலயத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆலயங்களில் இது போன்ற தொடர் திருமண நிகழ்வுகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்த போது, இந்த திருமணங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: உருவானது ‘யாஸ்’ புயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.