பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன ஏரி இருந்தது. இந்த ஏரியின் மூலம் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த ஏரியை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டங்கள் கட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த பொதுமக்கள் பேசுகையில், ஏரியின் வரைபடம் இல்லாததால் ஏரியின் பரப்பளவு தெரியவில்லை. பொதுமக்கள் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஏரியின் பரப்பளவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் வந்தபோது, சுமார் 200 ஏக்கர் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது 100 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றனர்.
எனவே ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததற்கு நடவடிக்கை எடுக்குமாறும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்குவதை எதிர்த்து தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். இந்த புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!