மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக கண்ணை கட்டிக் கொண்டு போராட்டம் நடைபெற்றது.
மேலும் விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசார் கைது!