பெரம்பலூர்: திருமாந்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் மூலம் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டிடிபிஎல், (TTPL) என்ற முதன்மை ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து சப்-காண்ட்ராக்ட் முறையில் ஒப்பந்தம் எடுத்துள்ள எஸ்கேஎம், (SKM) என்ற நிறுவனம் இங்கு பணியாற்றி வந்த 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சுங்கச்சாவடி அருகே கடந்த 1ஆம் தேதி முதல் 30ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக பணியில் உள்ள மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இன்றி வாகனங்கள் பயணம் செய்து வந்தன.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை நேற்று இரவு நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் உங்கள் போராட்டம் தொடரட்டும். இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் பேசி தீர்வு காண முயற்சி மேற்கொள்கின்றேன்.
உங்களுக்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் ஆதரவாக உள்ளனர். எனவே போராட்டம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருநெல்வேலிக்கு வந்து பாரு; உன் நாக்கை அறுப்போம் - பாஜக நிர்வாகி மிரட்டல்