ETV Bharat / state

அரசுப்பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டவட்டம்!

author img

By

Published : Jul 14, 2022, 2:52 PM IST

அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

sivashankar
sivashankar

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திட்டப்பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. அதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

அரசுப்பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்தத்திட்டங்கள் அனைத்தும் தொடரும், தனியார் மயம் என்ற பேச்சுக்கு இடமில்லை.

போக்குவரத்து ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று(ஜூலை 13) நடைபெற்ற ஐந்தாம் கட்டப்பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.

சென்னையில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது. சென்னையில் எந்ததெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதை கண்டறிந்து அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அது முடிந்த பின்பு விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலினை கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆக்குவார்கள் - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.