பெரம்பலூர்: வேப்பூர் அருகே உள்ள ஆண்டி குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ், செல்வி தம்பதி. தர்மராஜ் பெரம்பலூர் நாரணமங்கலம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்கள் அதே ஊரில் காட்டு கொட்டகையில் வசித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் பணிக்கு தர்மராஜ் சென்று விடுவது வழக்கம்.
அவரது மனைவி செல்வி அதே ஊரில் உள்ள அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார். இதனையறிந்த கொள்ளையர்கள் 4 பேர் வீட்டின் கதவினை உடைத்து வீட்டிற்குள் பீரோவில் இருந்து 5 சவரன் தங்க நகைகள், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடிச் சென்றனர்.
மேலும் அந்த வீட்டில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்காமல் உள்ளே சென்றவர்கள் திடீரென கேமரா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதை தொடர்ந்து சிசிடிவி கேமராவை உடைத்துச் சேதப்படுத்தி விட்டுச் சென்று விட்டனர்.
இது குறித்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர் வீட்டில் கைவரிசை காட்டிய நபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:”நீங்க தர லஞ்சத்துல தான் எங்களுக்கு சம்பளமே” - தற்காலிக அலுவலர்களின் வைரல் வீடியோ