பெரம்பலூர் அருகே நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 21). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வி.களத்தூர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதமன்றத்தில் நடைபெற்றது. மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.