பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் அருள்மிகு அய்யனார் திருக்கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதனிடையே நேற்று (ஜூன் 28) மாலை பூசாரி பூஜை நடத்திய பிறகு கோயிலை சாத்திவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து இன்று (ஜூன் 29) காலை அவ்வழியாகச் சென்றவர்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து மங்களமேடு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
![temple theft in perambalur in lockdown](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-01-temple-theft-script-image-7205953_29062020100756_2906f_1593405476_785.jpg)
இதையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கோயில் உண்டியல் திருடப்பட்டிருப்பதும் உண்டியலில் ரூ.20,000 பணம் இருந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு காலத்தில் கோயில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... உண்டியலுடன் மல்லுக்கட்டிய திருடன்: பணம் இல்லாததால் ஏமாற்றம்!