ETV Bharat / state

முன்விரோதம்: டாஸ்மாக்கில் இரட்டைக் கொலை... பெரம்பலூரில் போலீஸ் குவிப்பு! - two murder in tasmac

பெரம்பலூர் : முன்விரோதம் காரணமாக டாஸ்மாக்கில் வைத்து ஆட்டோ ஓட்டுநரை குத்திக்கொன்றவரை இறந்தவரின் சகோதரர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலி
author img

By

Published : Sep 16, 2019, 11:34 AM IST

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் மகன் ஆனந்த் (37), டூ வீலர் மென்கானிக்கான இவர் திருமணத்திற்கு பின் பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சண்முகம் (34). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த், சண்முகத்துக்கு இடையே முன்விரோதம் இருந்துவந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்றிரவு நல்லறிக்கை டாஸ்மாக் கடையில் சண்முகம், ஆனந்த் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய ஆனந்த், சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த ஆனந்த் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சண்முகத்தை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்தார்.

இதனிடையே, இத்தகவலை அறிந்த சண்முகத்தின் மூத்த சகோதரர் முருகானந்தம் ஆத்திரமடைந்து ஆனந்தைத் தேடி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஆனந்தை பீர் பாட்டிலால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலி

இந்நிலையில், கொலை செய்த முருகானந்தம் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். மேலும், இருவேறு சமூகத்தினரிடையே நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக அங்கே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Intro:பெரம்பலூர் அருகே குடிபோதையில் தகராறு. இருவர் கொலை.Body:பெரம்பலூர் அருகே டாஸ்மாக்கில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டில் மற்றும் கத்தியால் குத்தி இருவர் கொலை செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த எழிலரசன் மகன் ஆனந்த் (வயது 37) டூ வீலர் மென்கானிக்கான இவர் திருமணத்திற்கு பின் பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தில் உள்ள தனது மாமானார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சண்முகம்.(வயது 34) ஆட்டோ டிரைவர். இரு வேறு சமூகத்தை சேர்ந்த சண்முகம் மற்றும் ஆனந்த் ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்திலையில் இன்று இரவு நல்லறிக்கை டாஸ்மாக் கடையில் சண்முகம் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் மது அருந்தினர். போதை அதிகமானதுடன் ஆனந்த் சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது மேலும் ஆத்திரமடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சண்முகத்தை குத்தினார்.
இரத்த வெள்ளத்தில் இருந்த சண்முகத்தை பொதுமக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் சண்முகம் இறந்தார்.
இதனிடையே இத்தகவல் அறிந்த சண்முகத்தின் அண்ணன் முருகானந்தம் ஆத்திரமடைந்து ஆனந்தை தேடி டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது அருந்தி கொண்டு இருந்த ஆனந்தை பீர் பாட்டிலால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஆனந்த சம்பவ இடத்திலே இறந்தார்.Conclusion:இது தொடர்பாக முருகானந்தம் உள்ளிட்ட 4 பேரை தேடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இரு வேறு சமூகத்தினரிடயே நடந்த கொலை சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டு உள்ளதால் போலீஸ் குவிப்பு .
மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை நடைபெற்று வருகிறார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.